ரேடியோ மிர்ச்சி அலைவரிசையில் பாடகர் எம்.ஜே ஸ்ரீராம் பங்குபெற்று, இசைஞானியுடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அவருடனான கலந்துரையாடலிலிருந்து...
கே: நீங்கள் ராஜா சாரை அருகில் இருந்து பார்த்திருக்கிறீர்கள். மறக்க முடியாத சம்பவம் ஏதாவது?
ப: ”1993ல் முதன்முறையாக இசைஞானியை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. திரு. கமல்ஹாசன் சிங்கப்பூரில் நடத்திய நிகழ்ச்சியின் Finale க்கென இசைஞானி ஒரு பாடலை Compose செய்திருந்தார். ஏ.வி.எம். ஸ்டுடியோவில் இந்தப் பாடலின் பயிற்சிக்கென நாங்கள் சென்றிருந்தோம். அவரின் அறைக்குள் நாங்கள் ஒரு கோவிலுக்குள் போவதுபோல கைகட்டிக்கொண்டு பயபக்தியுடன் சென்றோம். ரொம்ப யதார்த்தமாக ஒரு ஹார்மோனியம் ஒன்றை வைத்துக்கொண்டு அந்த Finale பாடலை எங்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். பாடலின் Situation என்னவென்றால் விஜயதசமி விழா ஒன்றில் பாடவேண்டிய பாடலுக்குOrchestra வரவில்லை. எப்படிப்பாடுவது என்று யோசிக்கின்றனர்.அப்போது திரு. எஸ்.பி.பாலசுப்ரமணியம் ‘ஏன் செய்ய முடியாது? எல்லோருக்கும் திறமை இருக்கிறது. வாயிலேயே இசையைக் கொண்டு வரலாமே?’ என்கிறார். ‘அது எப்படி முடியும்?’ என்று கமல் கேட்கிறார். அதைத் தொடர்ந்து பாலு சார் அந்தப் பாடலை எல்லோருக்கும் சொல்லிக்கொடுப்பது போல இசைஞானி அமைத்துக்கொடுத்தார். Instruments இல்லாமல் ஒரு பாடலை Create செய்து.. Orchestra feeling’உடன்.. அப்படி ஒரு பாடலை யாராலும் செய்ய முடியாது. That’s something amazing that nobody can even dream of doing. அந்தப் பாடல்தான் ‘நம்மவர்‘ படத்தில் இடம்பெற்றிருக்கும் கடைசி பாடல் (எதிலேயும் வல்லவன்’டா). We did that particular song on stage live at Singapore. கமல் சாருக்கு அந்தப் பாடல் மிகவும் பிடித்துப்போய் அதை நம்மவர் திரைப்படத்தில் உபயோகித்திருந்தார்”.
No comments:
Post a Comment